பக்கங்கள்

தமிழ் யாப்பு

தமிழ் யாப்பு என்பது  நமக்குக் கிடைத்திருக்கிற ஒரு விலை மதிப்பற்ற கருவூலம். ஒரு வியத்தகு கலைக்கடல்.... இந்த மாபெரும் பாட்டுப் பூஞ்சோலையை - இந்த மாபெரும் யாப்புக்கருவூலத்தை - மொழிவழி வாழும் ஓசைக் கலைக்கடலை - உளந்தழைக்க உணர்வூட்டும் ஆரமுதைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.

யாப்பு என்பது அவ்வளவு சிறப்புப் பெற்ற ஒரு நுட்பமான அறிதுறை.

உலக வரலாற்றிலேயே 2500ஆண்டுக்கால வரலாறு பெற்றதாக இன்றும் வளர்ச்சிப் பண்போடு வாழ்வதாக நாம் காணும் மொழி தமிழ்தான். அதிலும் தொடர்ந்து யாப்பு வளர்ச்சியைப் பெற்றிருக்கிற ஒரு சூழல் இந்தத் தமிழ் ஒன்றில்தான் உள்ளது. எந்தக் கால கட்டத்திலும் தமிழ் யாப்பு உறங்கிக் கிடந்ததில்லை 
                                                                            - அறிஞர் பொற்கோ